07/07/2019 அன்று திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் மற்றும் குளிக்கரையில் நமது சொந்தங்கள் பயன்பெற வேண்டி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டது.
முகாமில் 150 க்கும் மேற்பட்ட சொந்தங்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர், குறிப்பாக பெண்களும் ,வயது முதிர்ந்த பெரியோர்களும், குழந்தைகளும் பயன்பெற்றனர்.
அந்தந்த பகுதியை சார்ந்த இசை வேளாளர் சங்க இந்நாள், முன்னாள் தலைவர்கள் பங்குகொண்டு சிறப்புப்படுத்தினர்.
முகாமில் ரூபாய் 25000 மதிப்புள்ள மருந்து பொருட்கள் சொந்தங்களுக்கு வழங்கப்பட்டது.
மருத்தவ முகாமிற்கு தலைமை ஏற்று சிறப்பாக வழி நடத்திய
டாக்டர். முத்துக்குமார் அவர்களுக்கும், முகாமிற்கு இடமளித்து சிறப்பான உணவு உபச்சாரத்திற்கும் ஏற்பாடு செய்து முன்னிலை வகித்த திருநெல்லிக்காவல் இசை வேளாளர் சங்க தலைவர் திரு.பாஸ்கர் அவர்களுக்கும் , குளிக்கரையில் முகம்மிற்கு, திருமணமண்டபம் ஏற்பாடு செய்து, சிறப்பான உபசரிப்பளித்து முன்னிலை வகித்த திரு.கணேசன் மற்றும் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், முகாமை கடின உழைப்பால் சிறப்பாக ஒருங்கிணைத்து, சோதனை முயற்சியை சாதனையை மாற்றிய திரு.R.வெங்கடேசன், மாநில துணை செயலாளர் , திரு. S.தினேஷ்குமார் திரு.D.K. ராஜேஷ் திரு. S.தியாகராஜன் திரு A.சதீஷ்குமார்,
திரு.P.செந்தில்குமார், திரு.G.சிவபாலன் அனைவருக்கும்
தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
சொந்தங்கள் அனைவரும் பயன்பெற , தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம் நடத்த பேரவை தொடர்ந்து முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
மருத்தவ முகாம் நடத்த விருப்பமுடைய பகுதியை சார்ந்தவர்கள் பேரவையின் கீழ்கண்ட அலைபேசிகளை தொடர்புகொண்டு ஜூலை 16 முதல் முகாமிற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
MOBILE: 9962499488, 8072776595
ஒன்று படுவோம் உயர்வு பெறுவோம் .
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.