சொந்தங்களுக்கு வணக்கம்.
தங்கள்
அலைபேசிக்கு வரும், தங்கள் போன்புக் -ல் சேமிப்பில் இல்லாத
புதிய எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு
பதிலளிக்க முற்படும்போது,
கண்டிப்பாக மொபைல் டேட்டாவை ஆஃப் செய்த பிறகே
பதிலளிக்க வேண்டுகிறோம்.
பிறமொழி அழைப்புகளை
தவிர்ப்பதைப் போலவே, தவறான அழைப்பு என்று உணரும் பட்சத்தில், தமிழ்
அழைப்புகளையும் உடனடியாக கட் செய்ய வேண்டுகிறோம்.
குறிப்பாக, முதியவர்கள்
மற்றும் குழந்தைகள் குரலில் தொடங்கும் அழைப்புகளை உடனடியாக
துண்டிக்க வேண்டுகிறோம். (அவசியமான அழைப்பாக இருக்குமோ என்ற கேள்வி எழும்
பட்சத்தில், கட் செய்த பிறகு குறிப்பிட்ட
எண்ணிற்கு தொலைபேசி வழியாக தொடர்புகொள்ளலாம்)
முக்கியமாக, எந்த வங்கியும்
தங்கள் வாடிக்கையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கு
தொடர்பான முக்கிய தகவல்களை கேட்பதில்லை, அவ்வாறு வரும் அழைப்புகளை உடனடியாக கட்
செய்ய வேண்டுகிறோம். (அவசியமான அழைப்பாக
இருக்குமோ என்ற கேள்வி எழும் பட்சத்தில், தங்கள் வங்கி கிளைக்கு நேரடியாக சென்று
தெளிவு பெறலாம்)
மற்றும் தங்கள்
அலைபேசிக்கு வரும் குறுந்செய்திகள்,
முக்கியமாக ஹைப்பர் லிங்க் - உடன் வரும்
குறுந்செய்திகளுக்கு ஒரு முறைக்கு நூறு முறை ஆலோசித்த பின் செயல்படவும். ஹைப்பர்
லிங்க் - உடன் கூடிய வங்கி சார்ந்த குறுந்செய்திகளுக்கு, வங்கிக்கு நேராக
சென்று தெளிவு பெறுவது ஆக சிறந்தது.
- ராஜேஸ்வரன். ஆர். அதிபன்
STATE GENERAL SECRETARY - TNIVIP

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.