Thursday, 10 September 2020

தன்மானம் காப்போம்






 

இசைவேளாள சமூகத்தின் சுயமரியாதையை காப்போம்.


கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரித்து அறிவதே மெய்.


சமூக முன்னேற்றத்திற்காக சிலர் கடுமையாக உழைத்துக்  கொண்டிருப்பதாகவும், ஆனால், அதன் பலனை இளைஞர் பேரவை அறுவடை செய்துகொண்டிப்பதாகவும்  மாயபிம்பங்களை உருவாக்கியவர்கள், தனிமனித இழிவு பிரச்சாரங்களைத் தொடங்கி, அதன் தொடர்ச்சியாக தற்போது மாந்த்ரீக, தாந்த்ரீகர்களை விட்டு சாபம் விடவும் தொடங்கிவிட்டார்கள்.

தங்களின் 25 வருட அனுபவங்களும், முன்னேற்றங்களும் வாழ்க !

தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும்.. வாய்மையே வெல்லும்.

கரோனா நிவாரணநிதி வழக்கில் 2000 ரூபாய் பெற, ஏதோ ஒரு நலவாரியத்தில் உறுப்பினராக சொல்லி இசை வேளாளரின் கௌரவத்தை கேள்விக்குறியாக்கியதையே  பெருமை எனக் கருதும் போதே உங்கள் 25 வருட அனுபவம் பல் இளித்துவிட்டது.


கரோனா நிவாரண நிதிக்காக தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவை சார்பாக வழக்கு தொடர்ந்த பின், தொடர்ந்து வேறு இரு அமைப்புகளும் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தார்கள். பின்னர், இந்த ரிட் மனுக்களின் நோக்கம் என்பது இசை கலைஞர்களுக்கான லாக் டவுன் காலத்திற்கான உடனடி நிவாரண தொகை என்ற ஒரே காரணத்தினால், உயர்நீதிமன்றம் இந்த மூன்று வழக்குகளையும் ஒரே வழக்காக எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. ஆனால், இதில் நம் சமூக நலன் சார்ந்து, அதன் தனித்தன்மையை இழக்காதவாறு வாதாடியது என்னவோ நம் இசை வேளாளர் இளைஞர் பேரவையின் வழக்கறிஞர் திரு.ராஜேஷ் M.A., B.L அவர்கள் மட்டுமே.

 

விசாரணையின் பொது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஏற்கனவே உள்ள ஒரு வாரியத்தை குறிப்பிட்டு, ஏன் மங்கல  இசை கலைஞர்களும் , அந்த வாரியத்தில் சேரக்கூடாது எனும் கேள்வியெழுப்பினார். அந்த கேள்வியின் வழியே, ஏதாவது ஒரு சமரசம் ஏற்படட்டும் என்கின்ற எண்ணத்தில் நீதிபதி அவர்களும் மனுதாரர்களைப்  பார்த்து அதே கேள்வியை வினவ, அதற்கு நம் வழக்கறிஞர், திரு குகேஷ் அவர்களின் அறிவுறுத்தல்படி, நம் சமுதாயத்தின் தனித்தன்மையை அடகு வைக்க விரும்பாமல் குறிப்பாக சொல்லவேண்டுமெனில் 'ஒட்டு கல்யாணம்செய்யும் விதத்திலான அந்த சமரசத்தை ஏற்க மறுத்து வாதங்களை வைத்தார்.

 

எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனார் என்கின்ற ரீதியில் நாம் ஒரு வழக்கு தொடர்ந்த பின்னர், நம்மை பின்பற்றியே ஒரு மனுவை தாக்கல் செய்த  25 வருட அமைப்பு, அந்த ஒட்டு கல்யாணத்துக்கு ஒத்து ஊதியது.



இந்த 7476/2020  ரிட் பெட்டிஷன் வழக்கில் கடுமையாக நம் ஆட்சேபணையை தெரிவித்து, வேறு எந்த நலவாரியத்தோடும் இணைத்து எங்கள் தனிப்பட்ட அங்கீகாரத்தை, சுயமரியாதையை இழக்க மாட்டோம், எங்கள் சமுதாயத்தை, உடனடியாக கிடைக்கும் சொற்ப நிதிக்காக அடமானம் வைக்கப்  போவதில்லை  என்பதை அடிப்படையாகக் கொண்டு  வாதாடியதின் விளைவு, தனி வாரியம் என்ற இளைஞர் பேரவையின் தலைவர் திரு. கே.ஆர். குகேஷ்  அவர்களின் உறுதியான முடிவின் விளைவு, தனிவாரியம் என்ற பலவருட கனவு பலித்திட பிள்ளையார் சுழியாய் அமைந்தது.








இந்த வழக்கின் போக்கை கவனித்த தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவை,  உடனடியாக நம் சமுதாயத்திற்காக, மங்கல இசை நலவாரியம் என தனியாக வேண்டுமென்று, அடுத்த வழக்கை  8606/2020 உடனடியாக தாக்கல் செய்தோம். வழக்கை துரிதமாக நடத்தினோம். நம் வாதங்களை தமிழக அரசிற்கு எதிர் மனுதாரராக நாம் வைத்தோம்

கவனிக்க - இதில் வேறு எந்த சமுதாய அமைப்புகளோ, தனி நபர்களோ, தாந்த்ரீகர்களோ சம்பந்தப்படவில்லை.

நம் பின்னால் நம் சமுதாயம் இருக்கிறது என்ற ஒற்றை நம்பிக்கையுடன் மட்டுமே இந்த நெருப்பு ஆற்றில் குதித்தோம். பலரும் இது உங்களுக்கு  கிடைக்காது என்கின்ற அவநம்பிக்கை வார்த்தைகளை எங்கள் மீது அள்ளி தெளித்தார்கள். ஆனால், திரு.குகேஷ் அவர்களின் நம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் கடவுளின் கிருபையால் நல்ல தீர்ப்பு கிடைத்தது.

நம் மங்கல  இசை கலைஞர்களுக்காக தனி நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதி அரசர்கள், பரிந்துரை செய்து உத்தரவிட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்த பெருமை தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவைக்கு மட்டுமே சொந்தமானது.

இதோ, இப்போது WP NO. 8606/2020 வழக்கின் தீர்ப்பு நகல் நம் கைகளில்.

இது தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவையின் கடின உழைப்பிற்கு கிடைத்த இரண்டாம் வெற்றி.

 





தீர்ப்பு வெளியான அன்று, தொலைக்காட்சி ஊடகத்தில், வழக்கு தொடுத்தவர்கள் பெயரை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டதை தனக்கு சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டுப் பலரிடமும் தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸப் வழியாகவும் தான் தான் அதை செய்தேன் என்று பெருமை  பீற்றிக்  கொண்டபுரட்டு ஆசாமியின் குட்டு,  24 மணிநேரத்தில் வெளிப்பட்டது. ஏனெனில், அதே தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் விபரமாக,  வழக்கை தொடர்ந்தது திரு.குகேஷ்  தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டின. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான் ஆனால் முட்டாள் புளுகு முப்பது மணி நேரம்தான்.

இந்த இரண்டாம் வெற்றியை பேரவையின் வழிகாட்டிகளுக்கும்முன்னேற்றத்துக்காக உழைத்த, உழைத்து கொண்டிருப்பவர்களுக்கும், முதுகெலும்பாய் இருக்கும் சமுதாய அன்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

வழக்காடிய வழக்கறிஞர் திரு.ராஜேஷ் M.A., B.L (7476/2020), . வழக்கறிஞர் திரு. K.சக்திவேல் M.A., B.L  (WP NO. 8606/2020) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

தக்க நேரத்தில் சரியான தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

உடல்நலம் குன்றியிருந்த போதும், தனி நலவாரிய முயற்சியில் ஒரு படியேனும் முன்னேறி, நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில் என்பதை நிரூபிக்க  வேண்டும் என வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்ட தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவையின் நிறுவனர் - தலைவர் திரு கே.ஆர். குகேஷ்  அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

தனி வாரியம் அமையும் வரையிலும், சமூகத்தின் அவலங்கள் ஒழியும் வரையிலும்  தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவை தனித்துவத்துடன் போராடிக்கொண்டே இருக்கும்.

செல்லவேண்டிய தூரம் அதிகம்.

 

                                                        ஒன்று படுவோம்                                                         

உயர்வு பெறுவோம்.


உங்களில் ஒருவன்                                                                                           

  RAJESWARAN  R  ATHIPAN

GENERAL SECRETARY - TNIVIP - 8072776595